மினுவாங்கொடை கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மினுவாங்கொடை கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மினுவாங்கொடை கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2015 | 1:22 pm

மினுவாங்கொடையிலுள்ள நகைக் கடையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்து கடையின் உரிமையாளரை சுட்டுக்கொன்ற சந்தேகபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மினுவாங்கொடை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான சீ.சீ.டி.வி காட்சிகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

மினுவாங்கொடை நகரிலுள்ள நகைக் கடையொன்றுக்குள் நேற்று மாலை 6.45 மணியளவில் கொள்ளையர்கள் புகுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை பொதுச் சந்தையிலுள்ள குறித்த நகைக் கடைக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு கொள்ளையர்கள் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது, கடையின் உரிமையாளருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதன் பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த 48 வயதான மொஹைதீன் மொஹமட் என்ற வர்த்தகரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்