மாணவர்கள் உள்ளிட்ட 28 பேரைக் கடத்திய வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

மாணவர்கள் உள்ளிட்ட 28 பேரைக் கடத்திய வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

மாணவர்கள் உள்ளிட்ட 28 பேரைக் கடத்திய வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 8:26 pm

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் 11 பேர் உட்பட 28 பேரைக் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்ததுடன், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கடத்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்