பிரஜைகள் முன்னணியை வடக்கில் போட்டியிடுமாறு வேண்டுகோள்

பிரஜைகள் முன்னணியை வடக்கில் போட்டியிடுமாறு வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 9:00 pm

வன்னி மாவட்ட மக்களும் சமூக மேம்பாட்டு அமைப்பினரும் பிரஜைகள் முன்னணியை வடக்கில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதற்கமைய, வவுனியா சமூக மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்களுக்கும், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (07) வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா, கணேசபுரம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்காவும் சமூக மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தமக்கு அரசியல் களத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வவுனியா சமூக மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஶ்ரீரங்காவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, வவுனியா சமூக மேம்பாட்டு அமைப்பினதும் வன்னி மக்களினதும் வேண்டுகோளைக் கலந்தாலோசிப்பதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்