நீர் நிலைகளின் தரத்தை ஆய்வு செய்யும் இயந்திர வாத்து (VIDEO)

நீர் நிலைகளின் தரத்தை ஆய்வு செய்யும் இயந்திர வாத்து (VIDEO)

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 5:08 pm

நீர் நிலைகளின் தரத்தை ஆய்வு செய்ய ஜி.பி.எஸ். மூலம் இயங்கக்கூடிய இயந்திர வாத்துகளை சிங்கப்பூர் பயன்படுத்தி வருகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்லும் சிங்கப்பூர், சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்க மறப்பதில்லை.

அந்த வகையில், அந்நாட்டில் உள்ள பந்தன் நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு நடத்த ஜி.பி.எஸ் உதவியால் இயங்கக்கூடிய இயந்திர வாத்து பொம்மையை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

தண்ணீரின் ph அளவை ஆய்வு செய்து ஆய்வாளர்களுக்கு அனுப்பும் வல்லமை படைத்த வாத்து பொம்மையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இயக்குகின்றனர்.

nuswan-researchers-at-the-reservoir

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்