தேர்தல் சட்டமீறல்கள் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட செயலகங்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்

தேர்தல் சட்டமீறல்கள் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட செயலகங்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்

தேர்தல் சட்டமீறல்கள் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட செயலகங்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2015 | 8:38 am

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முறைப்பாடுகளை மாவட்ட செயலகங்களிலுள்ள முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கும் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்வதும் பயனுள்ளதாக அமையும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக இதுவரை 61 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வரவுள்ளது.

நேற்று மாத்திரம் 22 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன.

அத்தோடு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நான்கும், சுயேட்சைக் குழுவொன்றும் இதுவரை ஐந்து மாவட்டங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

திகாமடுல்லை மாவட்டத்தில் இரண்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தவிர யாழ்ப்பாணம், வன்னி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்