தமிழ் மொழி மூலமான Newsfirst Online Academy அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

தமிழ் மொழி மூலமான Newsfirst Online Academy அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2015 | 10:45 am

Newsfirst Online Academy தமிழ் மொழிமூலமான ஊடக கற்கைநெறி இன்று (08) முல்லைத்தீவில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நியூஸ்பெஸ்ட் டிஜிட்டல் பிரிவின் பணிப்பாளர் கந்தவேள் மயூரன் மற்றும் நியூஸ்பெஸ்ட் டிஜிட்டல் பிரிவின் பிரதி முகாமையாளர் ரமேஷ் இருகல்பண்டார, நியூஸ்பெஸ்ட் செய்திப் பிரிவின் பிரதி முகாமையாளர் இரா.கோகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகளும் நியூஸ்பெஸ்ட் குழாத்தினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த இணையத்தளத்திற்கு பிரவேசிக்க : http://newsfirst.lk/academy/tamil/


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்