எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அருகாமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அருகாமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 8:48 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு கேம்பிறிஜ் பிளேஸிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அருகாமையில் இன்று வருகை தந்திருந்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சிலர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தத் தயாராக இருந்த சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வருகை தந்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிலர் குறுகிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டமை எமது கெமராவில் பதிவாகியது.

காணொளியில் காண்க….


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்