75 ஆண்டு கால இணைபிரியா வாழ்க்கை: இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி

75 ஆண்டு கால இணைபிரியா வாழ்க்கை: இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி

75 ஆண்டு கால இணைபிரியா வாழ்க்கை: இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 11:12 am

அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

75 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதி, முதுமை காரணமாக உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்தனர்.

அருகருகே படுக்கையில் இருந்தபடி இருவரும் சிகிச்சைபெற்று வந்தனர்.

இந்நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழக்க வேண்டும் என்ற ஆசையைத் தங்களது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே படுக்கைக்கு மாற்றப்பட்டனர்.

இருவரும் தங்களது ஆசைப்படியே ஒரே படுக்கையில் கைகோர்த்தபடி உயிரிழந்தனர்.

இந்தத் தம்பதிக்கு 5 குழந்தைகளும், 16 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

அவர்களில் 6 பேர் கொள்ளுப்பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2A1DE97D00000578-3144803-image-m-69_1435683253159 2A1DE97D00000578-3144803-image-m-101_1435685747515 2A1DE98B00000578-3144803-image-a-62_1435683158891 2A1DE98200000578-3144803-image-m-64_1435683182980 2A2F0E0200000578-3144803-image-a-2_1435874534767


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்