வெலாங்கலயில் 25 வருடங்களாக இடம்பெறும் கல்லுடைப்பால் சூழல் சமநிலை பாதிப்பு

வெலாங்கலயில் 25 வருடங்களாக இடம்பெறும் கல்லுடைப்பால் சூழல் சமநிலை பாதிப்பு

வெலாங்கலயில் 25 வருடங்களாக இடம்பெறும் கல்லுடைப்பால் சூழல் சமநிலை பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 4:41 pm

அவிசாவளை, வெலாங்கல பகுதியில் கடந்த 25 வருடங்களாக கல்லுடைக்கப்பட்டு வருவதனால் சூழல் சமநிலை மற்றும் மனித வாழ்விற்கு பாதகமான நிலை தோற்றம் பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக கல் உடைக்கப்பட்டு வருவதனால் சூழல் மாசடைவதாகவும், கிணற்று நீரில் தூசு படிவதனால் அந்த நீரைப் பருகும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்குவாரிக்கு அருகில் உள்ள மக்களுக்கு வீடு கட்டுவதற்கு மாற்றுக் காணிகள் வழங்குவதாகத் தோட்ட நிர்வாகம் அறிவித்த போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்குவாரி செயற்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட பல தரப்பினருக்கும் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மனித உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் வாழ்விடங்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மனித வாழ்விடங்களின் சூழல் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்