லிந்துலை ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

லிந்துலை ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

லிந்துலை ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 4:12 pm

லிந்துலை, மட்டுக்கலை தோட்டத்திலுள்ள ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதுடன், பெறுமதிமிக்க சொத்துக்கள் அடையாளம் தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன.

இந்தத் திருட்டுச் சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளதுடன், ஆலயத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் வழியாக உட்புகுந்த திருடர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆலயத்தில் நேற்றிரவு (03) இடம்பெற்ற மண்டலாபிஷேக பூஜைகளின் பின்னர் தோட்ட மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்ற பின்னரே ஆலயத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் அம்மன் விக்கிரகத்திலிருந்த ஆபரணம், ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆலய பரிபாலன சபையினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்