மொரவெவயில் இரு தரப்பினரிடையே கைகலப்பு

மொரவெவயில் இரு தரப்பினரிடையே கைகலப்பு

மொரவெவயில் இரு தரப்பினரிடையே கைகலப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 12:25 pm

திருகோணமலை, மொரவெவ பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறு விபத்துச் சம்பவமொன்றை அடிப்படையாகக்கொண்டு மொரவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்