மஹிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் – T.B. ஏக்கநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் – T.B. ஏக்கநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் – T.B. ஏக்கநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 5:36 pm

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.B. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே T.B. ஏக்கநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

14 இலட்சம் வாக்குகள் குருநாகல் மாவட்டத்தில் உள்ளதால் அங்கு போட்டியிடுவதன் மூலம் கூடுதலான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குச் செல்லக்கூடிய சந்தர்ப்பம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்குக் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்