பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 3:47 pm

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடவுள்ளதாக, கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 200 வருடகால மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படாத நிலையில், அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மலையகத்தில் லயன் அறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகள் சீர்கெட்டுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

நாடு சுதந்திரமடைந்து, 65 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மாறி மாறி வந்த கட்சிகளினால் மலையக மக்களின் வாழ்க்​கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தோட்டங்களிலும் உள்ள பாதைகள் சீர்செய்யப்படும், மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும், இளைஞர்களுக்கு படிப்பிற்கேற்ற அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதனால் சமூக அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்