ஜனாதிபதி மக்களின் தீர்மானத்தை மீற மாட்டார்: ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை

ஜனாதிபதி மக்களின் தீர்மானத்தை மீற மாட்டார்: ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை

ஜனாதிபதி மக்களின் தீர்மானத்தை மீற மாட்டார்: ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 5:03 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 62 இலட்சம் மக்களின் தீர்மானத்தை மீற மாட்டார் என பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய, ஓபேசேகரபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்களைத் தெளிவூட்டும் திட்டத்தின் போது கொள்கைவகுப்பு மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

[quote]சுசில் பிரேமஜயந்தவின் வீட்டில் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளமை குறித்து முழு நாட்டு மக்களும் அறிவார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என கூறுகின்றார். மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிப்பதற்காக காலை முதல் இரவு வரை பணியாற்றுகின்றார். மைத்திரிபால சிறிசேனவிற்காக வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன தீங்கு விளைவிக்க மாட்டார் என நான் இன்னும் நம்புகின்றேன். அவர் மீது நான் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்