ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்பு

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்பு

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 5:26 pm

தமிழகத்தின் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று பதவியேற்றார்.

கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா ஜெயராம் 1.5 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றியீட்டினார்.

தேர்தலில் தமிழக முதல்வர் 1,62,432 வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று ஜெயலலிதா பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்நிகழ்வு இரத்தாகியது.

இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

பெருந்தொகையான மக்களின் ஆதரவுடன் தமிழக முதல்வர் பதவியேற்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் சென்ற தமிழகத்தின் முதல்வர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்கொண்ட முதல் தேர்தலில் பெரு வெற்றி பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்