அனைத்து பிராந்தியங்களிலும் பொலிஸ் தேர்தல் பணியகம் : பொலிஸ் தலைமையகம்

அனைத்து பிராந்தியங்களிலும் பொலிஸ் தேர்தல் பணியகம் : பொலிஸ் தலைமையகம்

அனைத்து பிராந்தியங்களிலும் பொலிஸ் தேர்தல் பணியகம் : பொலிஸ் தலைமையகம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 9:31 am

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து பொலிஸ் பிராந்தியங்களிலும் பொலிஸ் தேர்தல் பணியகமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொலிஸ் பணியகங்கள் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் இயங்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அந்தந்த பொலிஸ் பிராந்தியங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் பொலிஸ் தேர்தல் பணியகத்தினால் கண்காணிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்