வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுப்பு

வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2015 | 9:03 pm

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புகள் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

தலவாக்கலை நகரத்தில் இன்று இவ்வமைப்பின் மூலம் காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு, வேட்பாளர்கள் வேட்பு மனு வழங்கும் போது கருத்திற்கொள்ள வேண்டிய மற்றும் அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக மக்கள் மத்தியில் இருந்து கையெழுத்து பெரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள், சமூக அமைப்புகள், முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்