மின்னேரியாவில் இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

மின்னேரியாவில் இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 9:38 am

மின்னேரியா பகுதியில் இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

மின்னேரியா ரொட்டவெவ பகுதியிலுள்ள நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒன்றில் கடைசி குழந்தையே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

தாய், வீட்டுக்குள் இருந்த போதே குழந்தை நேற்று (01) பிற்பகல் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குழந்தை வீட்டுக்குள் இல்லாதிருப்பதை அறிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்திருப்பது அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்