பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 10:33 am

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றிரவு ஒன்பது மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட  உபகரணங்களும்  கைப்பறப்பட்டுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒபாநாயக்க பகுதியை சேர்ந்த 25 தொடக்கம் 47 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைகளுக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்