பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை – சந்திரிக்கா பண்டாரநாயக்க

பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை – சந்திரிக்கா பண்டாரநாயக்க

பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை – சந்திரிக்கா பண்டாரநாயக்க

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 1:20 pm

பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

உலகில் மதுபாவனை அதிகமுள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இளம் சமூகத்தினர் அதிகளவில் போதைப்பொருள் பாவிக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது எனவும் இதன் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மேலும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலான அமைச்சர்கள், உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வாக்குகளில் தம்மை வளப்படுத்தவும் தமது பைகளை நிறைத்துக் கொள்ளவுமே முயற்சித்தனரே தவிர நாட்டை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

இதே வேளை , கம்பஹா யக்கல சிறிவர்தனாராம விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளிலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்