பெண்ணொருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

பெண்ணொருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

பெண்ணொருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 1:33 pm

பெண்ணொருவரை அச்சுறுத்தி 2000 ரூபா இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் பெண்னொருவரை அச்சுறுத்தி குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு உத்தியோகஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்