புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரிடையே சந்திப்பு

புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரிடையே சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2015 | 9:27 pm

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றம், கைத்தொழில், விவசாயம், கல்வி, மீன்பிடி, வீதி அபிவிருத்தி, முதலீடுகள், தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உல்லாசத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்கு அறிவிப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட மாகாண சபையின் பல அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்