கார் நிறுவன ஊழியரை நசுக்கிக் கொலை செய்த ரோபோ

கார் நிறுவன ஊழியரை நசுக்கிக் கொலை செய்த ரோபோ

கார் நிறுவன ஊழியரை நசுக்கிக் கொலை செய்த ரோபோ

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2015 | 4:03 pm

ஜெர்மனியில் உள்ள வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியரை, அங்கிருந்த ரோபோ நசுக்கிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் ஃப்ராங்ஃப்ரூட்டில் உள்ள வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு பணியாற்றி வந்த 22 வயதுமிக்க ஊழியரை பணியில் இருந்த ரோபோ திடீரென இழுத்து பெரிய தகடு மீது தள்ளி நசுக்கிக் கொன்றதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரோபோவின் செயல்பாடுகள் திடீரென மாறுவதற்கு அதற்கு அளிக்கப்பட்ட தவறான வழிமுறைக் குறிப்புகளே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது அந்த ஊழியருடன் மற்றொரு ஊழியரும் இருந்ததாகவும், அவருக்கு ரோபாவால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவம் குறித்து நிறுவனத்தின் சார்பில் சரியான தகவல் தர மறுத்து வருகின்றனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ரோபோ, கார் உதிரிப் பாகங்களை இணைத்துக் கையாளும் பணிக்காக தயாரிக்கப்பட்டதாகும்.

BN-EI445_0901eu_P_20140901034729 car-factory-machine-Volkswagen-plant-588230


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்