இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 8:32 am

இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மாத்தறை கடற்பகுதியூடாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களே சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி. சில்வா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மீனவர்களையும் அவர்களின் 31 படகுகளையும் விடுவிடுக்குமாறு வலியுறுத்தி ராமேஷ்வரம் மீனவர்கள் நேற்று (01) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

மீனவர்களை விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதத்தில் நேற்று (01) ஈடுபட்டிருந்தனர்.

மீனவர்கள் கடலுக்குல் செல்லாமல் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் கூறினார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 19 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்