அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தின் பணிப் பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பாதிப்பு

அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தின் பணிப் பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பாதிப்பு

அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தின் பணிப் பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 9:25 am

அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணி பகிஷ்கரிப்பு  காரணமாக நாடளாவிய ரீதியில் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உதேணி களுதந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டி.எம்.டி திசாநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அரச மருந்துக் கலவையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவு குறித்தும் சிறைச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலளார் குறிப்பிட்டார்.

எனவே வெகு விரைவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் எனவும் நோயாளர்களின் நிலையை கருத்திற் கொண்டு அரச மருந்துக் கலவையாளர்கள் , தமது கடமைகளில் ஈடுபடுமாறும் சுகாதார அமைச்சின் செயலாளர் டி.எம்.டி திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்