ஶ்ரீ.சு.க. நேர்முகத் தேர்வு: சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாருவ லியனகே சுனில் பங்கேற்பு

ஶ்ரீ.சு.க. நேர்முகத் தேர்வு: சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாருவ லியனகே சுனில் பங்கேற்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 9:21 pm

கடந்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேர்முகத் தேர்வில் இன்று பங்கேற்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று சென்றிருந்த சாருவ லியனகே சுனில், இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை விடுத்தார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வாடி வீடொன்றில் 14 வயது சிறுமி ஒருவரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், இரண்டு மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்