மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் அடையாள உண்ணாவிரதம்

மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் அடையாள உண்ணாவிரதம்

மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் அடையாள உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 6:47 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததுடன் அவர்களுடைய மூன்று படகுகளையும் கைப்பற்றினர்.

தமது மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.

இதுதவிர, இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள 19 மீன்பிடி படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் படகுரிமையாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இராமேஸ்வரம் மீனவர்கள் விடுத்துள்ளனர்.

மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டுத் தருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என இராமேஸ்வர மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்