மருந்தகங்களில் மாணவர்களுக்கு போதை தரும் வில்லைகள் விற்ப​னை: ஹட்டனில் இருவர் கைது

மருந்தகங்களில் மாணவர்களுக்கு போதை தரும் வில்லைகள் விற்ப​னை: ஹட்டனில் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 8:27 pm

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அதன் மூலம் இலாபம் ஈட்டும் பிரிவினரும் எமது சமூகத்தில் உள்ளனர்.

அவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு போதையை ஏற்படுத்தும் வில்லைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் மற்றுமொருவரும் ஹட்டன் நகரில் நேற்று (30) கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் வியாபாரம் புதுத்தோற்றம் பெற்று தற்போது மருந்தகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றமை கவலை தரும் விடயமாகும்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அருகில் உள்ள மருந்தகங்களில் போதையை ஏற்படுத்தும் வில்லைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹட்டன் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதையை ஏற்படுத்தும் வில்லைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்கள் சிலரின் உதவியையும் நாடினர் பொலிஸார்.

மாணவர்களை குறித்த மருந்தகத்திற்கு அனுப்பி போதையை ஏற்படுத்தும் வில்லைகளைக் கொள்வனவு செய்யுமாறு கேட்டதன்படி அவர்கள் செயற்பட்டனர்.

அதன்போது, அந்த வில்லைகளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஹட்டன் நகரின் முக்கிய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் அங்கு பணியாற்றிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்ட்ட இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்