பலப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பலப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பலப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 12:53 pm

பலப்பிட்டிய மொஹதிவத்த அம்பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பயணித்த பஸ் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (01) காலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய 22 வயதான பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்