பண்டாரவளையில் காணாமற்போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்

பண்டாரவளையில் காணாமற்போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்

பண்டாரவளையில் காணாமற்போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 5:28 pm

பண்டாரவளை செல்சித் தோட்டம் கீழ்ப்பிரிவில் காணாமற்போன பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டமொன்றில் நேற்று கொழுந்து பறிக்கச் சென்றிருந்த 54 வயதான குறித்த பெண் வீடு திரும்பவில்லை என அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இன்று முற்பகல் 10.20 அளவில் தேயிலைத் தோட்டத்தின் வடிகாணுக்குள் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்