படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது

படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது

படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் தமிழக பொலிஸாரால் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 8:23 am

இலங்கையிலிருந்து படகுமூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையிலிருந்து படகில் வந்த சிலர் நேற்று முன்தினம் (29) இரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கியதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரையுள்ள மணல் திட்டுகளுக்கு இடையே சந்தேகநபர் பதுங்கியிருந்தவேளையிலேயே கைது செய்ப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற மற்றுமொரு இலங்கையரை கைது செய்வதற்கான விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்