சுமத்திரா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுமத்திரா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுமத்திரா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 11:17 am

இந்தோனேஷிய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான வட சுமத்திரா மாகாணத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இராணுவப் போக்குவரத்து விமானத்தில் 12 ஊழியர்களும் பயணித்துள்ளதாக இந்தோனிஷிய அதிகாரிகள் கூறுகின்றனர்

நேற்று இந்தோனிஷியாவின் மெடானிலிருந்து புறப்பட்ட விமானம் சுமத்ரா தீவுக்கருகே தீடீரென தீப்பிடித்து அங்கிருந்த ஹோட்டலொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

சுமத்ரா தீவுகளின் தன்ஜுிங் பினாங் நோக்கிச் சென்ற விமானத்தில் இடைநடுவே புகை வெளியானதையடுத்து விமானி மீண்டும் விமான நிலையத்திற்கு பயணிக்க முற்பட்ட போதே விமானம் திடீரென்று தீப்பற்றியுள்ளதாக, சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்