கடற்படையிலிருந்து சட்டபூர்வமாக  விலகாதவர்களை  மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

கடற்படையிலிருந்து சட்டபூர்வமாக விலகாதவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

கடற்படையிலிருந்து சட்டபூர்வமாக விலகாதவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 7:23 am

கடற்படையிலிருந்து சட்டபூர்வமாக விலகாத உறுப்பினர்கள் மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கு இன்று முதல் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடற்படையை விட்டுச் சென்றுள்ள உறுப்பினர்கள் அருகிலுள்ள கடற்படை முகாமில் ஆஜராக முடியும் என கடற்படை பேச்சாளர் கொமாண்டர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

ஆஜராகும் தினத்திலேயே , கடற்படையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

பல்வேறு பாடநெறிகளை தொடர்வோர் மற்றும் சேவைக்கால ஒப்பந்தம் நிறைவடையாத உறுப்பினர்கள் சேவைக்காலம் நிறைவடையும் வரையில் கடற்படையிலிருந்து விலக முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்