எஸ்.எம்.எஸ் இன் தந்தையான  மக்கொனென் காலமானார்

எஸ்.எம்.எஸ் இன் தந்தையான மக்கொனென் காலமானார்

எஸ்.எம்.எஸ் இன் தந்தையான மக்கொனென் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 2:16 pm

எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் கைத்தொலைபேசிகளில் அனுப்பும் முறையை முதன்முறையாக மட்டி மக்கொனென் என்பவரே கண்டுபிடித்திருந்தார்.

63 வயதான இவர் பின்லாந்து நாட்டை சேர்ந்தவராவார். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்வதால்  இவர் எஸ்.எம்.எஸ் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அத்துடன் 1994 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்