எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 12:25 pm

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை, மெதமுலனயில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் வேண்டுகோளை ஒருபோதும் நிராகரிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஸ இதன் போது தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தம்மோடு இணைந்து செயற்பட்டமை போன்று இம்முறையும் தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஸ இதன் போது கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்