இலங்கையின் ஐ.நா மனிதாபிமான இணைப்பு அலுவலகம் இந்த வருட இறுதியில் மூடப்படும்

இலங்கையின் ஐ.நா மனிதாபிமான இணைப்பு அலுவலகம் இந்த வருட இறுதியில் மூடப்படும்

இலங்கையின் ஐ.நா மனிதாபிமான இணைப்பு அலுவலகம் இந்த வருட இறுதியில் மூடப்படும்

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2015 | 11:50 am

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பு அலுவலகம் இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூகினியாவில் உள்ள ஐ.நா மனிதாபிமான இணைப்பு அலுவலகம் இந்த மாதமும், இலங்கையிலுள்ள அலுவலகம் இந்த வருட இறுதியிலும் மூடப்படவுள்ளன.

ஐ.நா மனிதாபிமான இணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு பொறுப்பாக உள்ள ஒலிவர் லேசி ஹோல் இதனைக் கூறியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்