ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு வழங்கும் குழு இன்று கூடவுள்ளது

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு வழங்கும் குழு இன்று கூடவுள்ளது

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு வழங்கும் குழு இன்று கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 12:43 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு வழங்கும் குழு இன்று கூடவுள்ளது.

இதனடிப்படையில், மாவட்டங்களிலிருந்து வேட்பு மனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

வேட்பு மனுக் குழுவின் முன்னிலையில் சமூகமளிப்பதற்கு, முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிப்பது போதுமானது எனவும், புதிய விண்ணப்பதாரிகள் அமைப்பாளர்களுடன் சமூகமளிக்க வேண்டும் எனவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வின் பின்னர் தயாரிக்கப்படும் அறிக்கை பிரதான வேட்பு மனு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித்  தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்