ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 10:10 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் இன்று ஆரம்பமாகின.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தத் தேர்வு இன்று ஆரம்பமானது.

மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட புதுமுகங்கள் பலரும் இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கலாநிதி சரத் அமுனுகம, ஏ.எச்.எம் பௌசி, ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய, மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் நேர்முகத் தேர்வை நடத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்