ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் எவரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் எவரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 6:29 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை ​வெளியிட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எந்தவொரு இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் கருத்துக்கு அமைவாகவே, பிரதமர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக அங்கீகரிக்கவோ, அறிவிக்கவோ இல்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்