வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 7:29 am

2012ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தனியாக பொலிஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டமைக்கு அமைய, பொலிஸ்மா அதிபரிடம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சர் தெரிவித்தார்.

இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது

மோதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது அதில் பிரதான விடயமாகும்.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழுவினர் அனைத்து சாட்சி விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை கையளித்ததாகவும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அறிக்கையிலுள்ள ஒரு சில விடயங்கள் மாத்திரமே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதால் அவற்றை ஊடகங்களுக்கு அறிவிக்க முடியாத நிலை உள்ளதாகவும் விஜேதாஸ ராஜபக்ஸ கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்