விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 12:34 pm

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியொன்றில் உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ரஷ்யாவின் கெஸ்பரேனுடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் செரீனா வெற்றிபெற்றார்.

தொடரில் முதற்தடவையாக பங்குபற்றும் கெஸ்பரேன், செரீனாவுக்கு சவால் விடுக்கவில்லை.

6 – 4 எனும் புள்ளிகள் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

சிறப்பாக செயற்பட்ட செரீனா 6 – 1 எனும் புள்ளிகள் கணக்கில் இரண்டாம் சுற்றையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் முதல் சுற்றில் செரீனா வெற்றி பெற்ற 17 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்