விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் சமூகமயப்படுத்தப்பட்டனர்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் சமூகமயப்படுத்தப்பட்டனர்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:38 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு வழங்கல் இணைப்புக் காரியாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் சமூகமயப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கேர்ணல் எம்.எச்.ஆர் கமின்டோன் அவர்களின் பணிப்புரைக்கமைய இவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 06 ஆண் முன்னாள் போராளிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது, புனர்வாழ்வு காலத்தில் முன்னாள் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்