மார்ச் 12 பிரகடனத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பெப்ரல் அமைப்பு கலந்துரையாடல்

மார்ச் 12 பிரகடனத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பெப்ரல் அமைப்பு கலந்துரையாடல்

மார்ச் 12 பிரகடனத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பெப்ரல் அமைப்பு கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 11:46 am

மார்ச் 12 பிரகடனத்தில் உள்ள இணக்கப்பாடுகளை செயற்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் வேட்பு மனு குழுக்களுடன், இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வேட்புமனுவை வழங்கும் போது அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்திற்கொள்ள வேண்டிய 08 அடிப்படை விடயங்களை உள்ளடக்கி மார்ச் 12 பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரகடனத்திற்கு 10 இலட்சம் கையொப்பங்களை திரட்டும் பணிகள் தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்