மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – ம.வி.மு

மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – ம.வி.மு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 8:59 pm

மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஊழல் வாதிகள், மோசடிக்காரர்கள், திருடர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி வழங்கப்பட்ட மக்களின் வாக்குகளினால், ஊழல் மிகுந்த ராஜபக்ஸ ஆட்சி நிராகரிக்கப்பட்டது. எனினும், மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களை இணைத்துக் கொண்டு, தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதனை காணக்கூடியதாக உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்