போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சமூக கருத்தாடலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சமூக கருத்தாடலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:16 pm

போதைப்பொருளிலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சமூக கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இப்பாகமுவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இப்பாகமுவ மத்திய வித்தியாலயத்தின் 61ஆவது பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கு ஜனாதிபதி இன்று அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுடனும் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடல்களை நடத்தினார்.

மேலும், தனது பழைய ஆசிரியர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்