பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தத் தீர்மானம்

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தத் தீர்மானம்

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 8:09 am

எதிர்வரும் பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றும் சமூக சூழல் தொடர்பாக நன்கு அறிந்த சர்வதேச கண்காணிப்பாளர் 50 பேரை அனுப்பிவைப்பதற்கு இதன்போது இணக்கம்
காணப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் 15,000 உள்நாட்டு கண்காணிப்பாளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடனும் கலந்துரையாடுவதற்கு பெப்ரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் கண்காணிப்புப் பணிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்