பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றியதன் பின் எடிட் செய்யும் வசதி அறிமுகம்

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றியதன் பின் எடிட் செய்யும் வசதி அறிமுகம்

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றியதன் பின் எடிட் செய்யும் வசதி அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 10:13 am

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் மேல் வாக்கியங்களை எழுதும் மற்றும் எடிட் செய்யும் வசதியை அந்நிறுவனம் சில ஐ.ஓ.எஸ். பயனாளர்களிடம் பரிசோதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தை கொண்டுள்ள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது செங்குத்தான கோடு ஒன்று தோன்றும். அதை தள்ளும்போது கருப்பு-வெள்ளை, பிரைட் போன்ற பல்வேறு கலர் கரெக்‌ஷன் மற்றும் பில்டர் செய்வதற்கான வசதிகள் தோன்றும். அதேபோல் புகைப்படத்தின் மேல் வாசகங்களை எழுதும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி கிடைக்கப்பெற்ற சிலர் தங்கள் புகைப்படங்களை எடிட் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

ஸ்னெப்சொட் போன்று ஒரு சேவையை பேஸ்புக்கில் கொண்டுவர அந்த நிறுவனம் சில முறை முயற்சி செய்தது. ஆனால் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த முறை ஸ்னெப்சொட் போன்ற வசதியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். விரைவில் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்