புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 1:46 pm

புத்தளம் பாலாவி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறியொன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 மற்றும் 23 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கற்பிட்டி மற்றும் கந்தக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி தலைமறைவாகியுள்ளார்.

சந்தேகபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் மாரவில தல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய குழுவினர் பயணித்த வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம், மாரவில கொஸ்வடிய பகுதியில் லொறியொன்றுடன் மோதியதாக சம்பவத்தில் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், மோட்டார் வாகனத்தை நிறுத்தாது பயணித்த சாரதி பிரதேச மக்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த லொறி சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மற்றைய மோட்டார் வாகனத்தில் சாரதி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, பேருவளை ரயில் நிலையத்திலுள்ள மேடையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 13 வயது மாணவி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்