நாட்டிற்கு எத்தனோல் கொண்டு வந்த நபர் யார்: மஹிந்த ராஜபக்ஸ கேள்வி

நாட்டிற்கு எத்தனோல் கொண்டு வந்த நபர் யார்: மஹிந்த ராஜபக்ஸ கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:18 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டியில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது;

[quote]நிதி அமைச்சர் 28 எத்தனோல் அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதாக பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 100 நாட்களுக்குள் 28 வழங்கப்பட்டுள்ளது என்றால், இவர்கள் தொடர்ந்து இருந்தால் என்ன நடக்கும்? நாட்டிற்கு எத்தனோல் கொண்டு வந்த நபர் யார்? மத்திய வங்கியின் ஆளுநரது மருமகனே இந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளார். கோப் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறே அரசாங்கத்திற்கு முதலில் அழுத்தம் வந்தது. கோப் அறிக்கைக்கு நேர்ந்தது என்ன என்று தெரியவில்லை.[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்