தொடர்ந்து செயற்பட முடியாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – அநுரகுமார திசாநாயக்க

தொடர்ந்து செயற்பட முடியாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – அநுரகுமார திசாநாயக்க

தொடர்ந்து செயற்பட முடியாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – அநுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 1:37 pm

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் , தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ஏற்கனவே புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்திருக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

இதன் போது அநுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்..

[quote]கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு சட்டமூலத்தையும், எந்தவொரு திருத்தத்தையும் நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும், தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஓகஸ்ட் மாதம் என்பது எமது நாட்டில் முக்கியமான பரீட்சை நடைபெறும் காலப்பகுதியென்பது அனைவரும் அறிந்த விடயமாகும்[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்